ராமதாசு ஒரு காமெடி பீசு..!
வடிவேலு ஒரு படத்தில் தனது நண்பர்களை சற்று தொலைவில் நிற்க வைத்து விட்டு 'பலம்' வாய்ந்த எதிரியை சந்திக்க போவார், அங்கு அவர் எதிரியுடன் பேசும் போது அவருக்கு சாதகமான விஷயங்களை சத்தமாக தன் நண்பர்களுக்கு கேட்கும் படியாகவும், மற்றதை மெதுவாகவும் சொல்லி பேசுவார். அது தான் தோன்றியது பா.ம.க நிறுவனர் ராமதாசின் இன்றைய அறிக்கையை பார்க்கும் போது. அதே சிந்தனையோடு கீழ் காணும் அறிக்கையை படியுங்கள், அடைப்பு குறிக்குள் உள்ள விஷயங்கள் ராமதாஸ் மனசாட்சி வடிவேலு பாணியில் பேசி இருப்பதன் பதிவு..
"தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பாமக அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது."
(தைரிய மிருந்தா எங்களை போல எல்லோரும் கூட்டணியை விட்டு வெளில வாங்க..அப்பத்தானே யார் கூடவவாது நாங்க கூட்டணி சேர முடியும். அப்படி ஒத்துக்குங்க உங்க யாருக்கும் எங்களை போல் தைரியம் இல்லைன்னு..!)
ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அதிமுக கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.
(சுயமரியாதை ... இந்த ஒரு வார்த்தை மட்டும் இல்லன்னா நம்ம கதியை நினைச்சு பார்க்கவே பயமா இருக்கே. )
ஆனால் முதல்வர் கருணாநிதி யை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்கவே முடியாது..
(காசு கேட்டா கொடுக்குறாங்களா ...? எப்ப பாரு கொடநாடு போறேன் கொக்குநாடு போறேன்னு போய்டுறாங்க. )
அப்போது எங்களது கொள்கையோடு திமுகவின் கொள்கை ஒத்துப் போனதால் அதிமுகவை விட்டு விலகி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு திமுக தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.
(பாத்துக்குங்க நாங்க 'சுயமரியாதை' காரவுங்க நாங்களா அதிமுக கூட்டணிக்கு போகலை தி.மு.க தான் தள்ளி விட்டது... சு ..அப்பா இப்பவே கண்ணை கட்டுதே)
இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3வது அணியை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.
(திடீர்ன்னு ஒரு நிருபர் தெளிவா ஒரு முடிவை சொல்லுங்க அப்படின்னு கேட்டவுடன் டென்ஷன் ஆகி... "யாராது ராஸ்கல் கட்சி நடத்துறது என்ன அவ்வளவு சுளுவா..? நானே ஒன்னும் புரியாமத்தானே பேசிக்கிட்டு இருக்கேன்.சும்மா சும்மா. இனிமே யாரையும் பிரஸ் மீட்டுக்கு கூப்பிட போறதில்லை." )
7 comments:
ரைட்டு! ஆட்டோ வர வாழ்த்துக்கள்!!
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
Thanks I made that changes you referred, hope hereafter you wouldn't have this problem.
Politics is the art of possible.
கருத்துக்கள் போட ஒன்னும் இல்ல போட்ட ஆட்டோ வரும்னு பயமா இருக்கு.....
நீங்க சொல்றதை பார்த்தா ..."எங்க அண்ணன் மேல கை வச்சு பாருடா ..." அப்படின்னு நீங்களே உசுப்பேத்தி விட்டுடுவீங்க போல. அவுங்க கூட படிச்சுட்டு சும்மா போய்டுவாங்க போல நீங்க போடுற சத்தத்த கேட்டாதான் உடம்பு நடுங்குது...
ரொம்ப நாளைக்கு ஓடாது.
Post a Comment