அஹிம்சாவிற்கு அங்கீகாரம்
காந்திய கொள்கைகள் நம்ம நாட்டுக்கு ஒத்து வராது என்று இந்தியாவில் ஒக்காந்துகிட்ட வியாக்கியானம் பேசுபவர்களே ஒரு கணம் இங்கே கவனியுங்க அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் காந்தி ஜெயந்திக்கு தரும் மரியாதையை பாருங்க. அமெரிக்க ஜனாதிபதி ஒபமாவும் "காந்திய வழிகளை பின்பற்றுவதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது " அப்படின்னு பேசி இருக்கிறார். இத்தனைக்கும் காந்திக்கும் அமெரிக்காவிற்கும் என்ன தொடர்பு ..? இது காந்தி என்ற தனி மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பதை விட அவர் கொண்டிருந்த அஹிம்சா கொள்கைக்கும், உண்மைக்கும் கிடைத்த அங்கீகாரமாவே நான் நினைக்கிறேன்.
நீங்க கேட்கலாம் அமெரிக்கா என்ன காந்தீய வழியையா பின் பற்றுகிறது அப்படின்னு. இதற்கு முன் இருந்த புஷ் (தற்பொழுது அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் அனைத்து போர்களையும் தொடங்கி வைத்த பெருமகனார், இதில் சீனியர் புஷும் அடக்கம்) காந்தீய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக தன்னை காட்டிக்கொண்டதாக எனககு தெரிந்த வரையில் இல்லை. அப்படி அவர் சொல்லிவிட்டு போரையும் செய்திருந்தால் அது நீங்க கேட்கிற கேள்விக்கு சாதகமான பதிலை தரலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த முதல் ஜனாதிபதியான ஒபாமாவிற்கு இந்த கேள்வி பொருந்தாது என்றே எனககு தோன்றுகிறது.
1 comments:
that is true..
Post a Comment