தினமலர் vs தினகரன்
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து சொல்வது போல் "இவங்க இப்பவுமே இப்படித்தான் பாஸ். இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ணமுடியுமா..?" என்ற ரேஞ்சுக்குதான் பத்திரிகை உலகமும், நடிகர்களும் நடந்து கொண்டுள்ளனர். மக்களை பற்றி யாருமே கவலை படுவதில்லை. சில தினங்களுக்கு முன் நாம் சொன்ன ("பத்திரிகை சுதந்திரம் --ஒரு பயவுரை" )
மாதிரி யார் கேட்டு ஒரு நடிகையின் அந்தரங்க விஷயங்களை அவரிடமே துருவி துருவி கேட்டு அதை செய்தியாக போட துணிகிறார்கள் இந்த பத்திரிக்கை யாளர்கள்..? அதை கொஞ்சம் கூட பயமோ, கூச்சமோ இன்றி பகிர்ந்து கொள்ள நினைக்கும் இந்த நடிகைகளை என்ன வென்று சொல்வது...? ஒரு விதத்தில் பார்த்தால் இது ரெண்டு பேருக்கும் தேவை தான்.
நடிகர் சங்கம் ஒரு கூட்டம் போடுகிறதென்றால் முதலில் கலங்குவது ரஜினியும்,கமலுமாகத்தான் இருக்ககூடும். எப்ப பாரு இவங்க ரெண்டு பேரையும் இழுக்காமல் இருப்பதில்லை. ஆனால் இந்த கூட்டத்தில் கமல் கலந்து கொள்ள வில்லை. ஒரு வேலை அவருடன் சிம்ரன் இணைத்து பேச பட்ட பொழுது யாரும் அவருக்காக குரல் கொடுக்காததாக கூட இருக்கலாம். வடிவேலு கூட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக எங்கும் படிக்க வில்லை பார்க்க வில்லை. விஜய், அஜீத், சிம்பு ன்னு ஒரு பெரிய பட்டியல் இந்த கூட்டத்துல கலந்துக்கல. ஒரு வேலை இவங்களும் கமல் மாதிரி பாதிக்கப்பட்டவுங்கலான்னு தெரியலை. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் அந்த பத்திரிகை தான் உங்களை கேவலமாக எழுதியது அதற்கான தண்டனையும் அந்த செய்தி ஆசிரியரை அடைந்துள்ளது. ஆனால் நீங்களும் அதே மாதிரி இல்லை அதை விட கேவலமாக பேசி இருக்கிறீர்களே இதை எப்படி எடுத்துக் கொள்வது...? இல்லை இதற்கும் தண்டனை தரப் படலாமா..?
சரி இதற்கு முன் இப்படி நடந்ததே கிடையாதா...? ஒரு நடிகையின் பேட்டியில் "இந்த கிசு கிசு ரொம்ப முக்கியம், எங்களை போல் வளரவங்களுக்கு, என்னை பத்தி வர்ற கிசு கிசுவை நான் படிப்பேன் சிரிச்சுக்குவேன் !!!" அப்படின்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காதவங்க யாரு சொல்லுங்க. பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது நியாயமா..? இல்லை கவர்ச்சியாகவோ ஆபாசத்தை தூண்டும் வகையிலோ நான் நடிக்க மாட்டேன்னு சொல்ற தைரியம் எத்தனை நடிகைகளுக்கு இருக்கு...? அதுக்காக அப்படி எழுதலாமா...? அப்படின்னு கேட்டால் . அது நாங்க தப்பு செய்வோம் நீங்க யாரும் அதை கண்டுக்க கூடாதுன்னு சொல்ற மாதிரிதான்.
இது எல்லாத்தையும் விட முக்கியம் அரசு இந்த விஷயத்தில் காட்டும் ஆர்வம், "தினமலர்" சில காலம் முன் தி.மு.க எதிர்ப்பு நிலையே கடைப்பிடித்து வந்தது, தி.மு.க தலைமைக்கும் சன் டி.வி.க்கும் முட்டிக்கொண்டவுடன் அதிகாரத்திற்கு பக்கத்தில் நகர்ந்தது (உபயம்: அஞ்ச நெஞ்சர்). அதற்கும் முன்பே "தினமலர்" "தினகரன்" இடையிலான தொழில் போட்டி எல்லை மீறி தனிப்பட்ட தாக்குதலாக மாறிப் போனது, உதாரணம் தினமலரின் உதவி ஆசிரியர் (ஆசிரியரின் மகன்) ஒரு பெண்ணை மான பங்கம் செய்ய முயற்சி செய்தமைக்காக கைது செய்ய பட்டது எல்லாம் தினகரனில் பக்கம் பக்கமாக வந்தது நாம் அறிந்ததே. தி.மு.க வுக்கும் அந்த சமயத்தில் ஒரு தினசரி ஆதரவு தேவை பட்டது (முரசொலி ஒரு கட்சி பத்திரிக்கை எனவே அது தவிர்த்து ஒரு ஆதரவை தேடியது), 'தினமலர்' நிறுவனர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார் கலைஞர், தி.மு.க எதிர்ப்பு நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டது. பதிலாக அரசு விளம்பரங்கள் சிலவற்றையும் பெற்றது "தினமலர்". இந்த சந்தோசம் நீண்ட நாள் நிலைக்க வில்லை பிரிந்தவர்கள் ஒன்று கூடினார்கள் இல்லை ஒப்பந்தம் நீடிக்க வழி செய்யப்பட்டது. எது எப்படியோ "தினமலர்" பாதிப்புக்குள்ளானது. "தினமலர்" அழகிரி செய்திகளை பிரதானமாக போடுவதும், "தினகரன்" ஸ்டாலின் செய்திகளை பிரதானமாக போடுவதையும் நாம் அன்றாடம் காணலாம். தி.மு.க தலைமையை பொறுத்த வரை ஒரே கல்லில் மூணு மாங்கா, நீங்க கேட்கலாம் யாரு அந்த மூணாவது மாங்கான்னு வேற யாரு நாமதான். "தினகரன்" "தினமலரை" போட்டு தள்ள நேரம் பார்த்துக்கிட்டே இருந்தது, அந்த நேரமும் வந்துச்சு உபயோக படுத்திகிடுச்சு, அப்படின்னுதான் தோனுது. நடப்பதை எல்லாம் பார்த்தா இந்த நடிகைகள் பிரச்சனையிலும் "தினகரனின்" கை சற்றே ஓங்கி இருக்குதோன்னு தோனுது. மொத்தத்தில் இது தினகரன் Vs தினமலர் சண்டை காட்சிகளே தவிர நமெக்கெல்லாம் சொல்லப்படுற மாதிரி தினமலர் Vs திரையுலகம் அல்ல.
6 comments:
//சரி இதற்கு முன் இப்படி நடந்ததே கிடையாதா...? ஒரு நடிகையின் பேட்டியில் "இந்த கிசு கிசு ரொம்ப முக்கியம், எங்களை போல் வளரவங்களுக்கு, என்னை பத்தி வர்ற கிசு கிசுவை நான் படிப்பேன் சிரிச்சுக்குவேன் !!!" அப்படின்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காதவங்க யாரு சொல்லுங்க. //
சரவணன்,
நடிகர், நடிகைகள், ‘கிசுகிசு’ வேண்டும் என்றது, இப்படிப்பட்ட விபச்சாரம் செய்தார்கள் என்ற கிசுகிசு அல்ல. எந்த நடிகர், எந்த நடிகையோடு உறவு, அல்லது, காதல் பண்ணுகிறார், எங்கே எங்கே சுற்றினார்கள் எனபதே.
இந்த புவனேசுவரி விடயத்தை தினமலர் மேல் பழிதீர்க்கத்தான் தி.மு.க அரசு செய்தது என்ற போக்கில் எழுதியிருக்கிறீர்கள்.
அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. சரத்குமார்,ராதிகா போன்றவர்கள் நேரடியாகச்சென்று மனுகொடுத்தபோது, முதல்வரால் ஒரேயடியாக முடியாதென்று சொல்லமுடியாது. மேலும், உதவி செய்யத்தான் வேண்டும். அவரும் திரைப்படத்துறையிலிருந்து வந்தவர்தானே.
திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு சங்கடம் என்னவென்றால், ஒரு நடிகையோ, நடிகரோ விபச்சாரம் பண்ணுகிறார்கள் என்றால் அதில் அவர்கள் தலையிட முடியாது. ஏனென்றால், இங்கு ஒருவரை ஒருவர் கட்டிப்டித்து முத்தம் கொடுப்பது அவர்கள் தொழில். எனவே, உடல் ஒழுக்கம் பேணமுடியாது. கண்டும் காணாமல் இருப்பதுவே சரி.
அப்படியே ஒருவர் மாட்டினால் என்றால், அவர் தன் மீது பொய்க்குற்றச்சாட்டு என்றால், அவர் திரைப்படச்சங்க சந்தா கட்டிய உறுப்பினர் என்றால், சங்கம் உதவி செய்தே ஆகவேண்டும்.
கருனானிதி செய்தது சரி. ஏனென்றால், ஒரு பத்திரிக்கை ஊகங்களை வைத்து செய்தி போடலாம். அப்பொது அவர்கள் ‘கிசுகிசு’ CATEGORY யில்தான் அச்செய்தியைப்போட வேண்டும். ஓபனாக அதை முதல்பக்கத்தில் முழுக்கமுழுக்க உண்மைச்செய்தியப்போல போடலாமா?
எனவே, தினமலர் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரி. இது தனிப்பட்ட செய்தி. இதற்கும் தினமலர் vs தினகரன் பாணியில் பார்த்தது சரியில்லை.
//அது நாங்க தப்பு செய்வோம் நீங்க யாரும் அதை கண்டுக்க கூடாதுன்னு சொல்ற மாதிரிதான்.// சரியாகச் சொன்னீர்கள்.
மூன்றடி நடந்தாலே மூச்சி வாங்கும் வயதான hero , அவருக்கு 15 வயது பெண் குழந்தை ஜோடி, கிட்டதட்ட அவரின் பேத்தி வயதுக்கும் குறைவான வயதுடைய பெண் அவருக்கு தேவை.இது ஒரு, child abuse. இதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும்.
ஹீரோ , ஹீரோயின் இடைய வயது வித்தியாசம் அதிக பட்சம் 10 வருடம் என சட்டம் கொண்டுவரவேண்டும்.தமிழ் மக்களின் வாழ்கையை வீணடிக்கும் திரைத்துறையை தடை செய்ய வேண்டும்.
தமிழ் வாலிபர்களின் எதிர்காலத்தையே பாழடிக்கும் ரசிகர் மன்றங்களை தடை செய்ய வேண்டும். கலாசார சிரழிவின் முக்கிய காரணமான சினிமாவை தடை செய்ய வேண்டும் .
சென்சார் போர்டின் உறுபினர்களாக பத்திருக்கியாளர்களை நியமிக்க வேண்டும்.
கதாநாயகி அணியும் உடைகளுக்கு அளவு நிர்ணயம் செய்யவேண்டும்.
முக்கியமாக திரைப்படங்களை consumer துறையின் கீழ் வர வகை செய்ய வேண்டும்.
தரமில்லா படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .
கள்ளபிரான் அவர்களே தங்கள் வருகைக்கும் பதிலீடுக்கும் நன்றி.
இந்த பிரச்சனையில் சன் டி.வி. குழுமம் காட்டும் ஆர்வம் அலாதியானது. நீங்கள் உற்று நோக்கும் போது இது சம்மந்தமாக நடந்த நடிகர் சங்க கூட்டத்தை அல்லது அது சம்மந்தமாக நடந்த முதல்வர் சந்திப்பு போன்றவற்றை அவர்களது டி.வி - இல் காண்பித்தவர்கள் பத்திரிகையாளர்கள் நடத்திய மறுப்பு போராட்டத்தை காண்பிக்கவில்லை. இத்தனைக்கும் இவர்களும் ஒரு பத்திரிகை நடத்துகிறார்கள். இதற்கு முன்பே இது மாதிரி நடந்திருந்தாலும், செய்தி சேகரிக்கும் எண்ணத்தை விட எதிரியை போட்டுத்தள்ளும் ஆர்வமே மேலோங்கி இருக்கிறது. இது அதிகாரமையத்திலும் பிரதிபலிக்க வைக்க இந்த குழுமத்திற்கு உள்ள தொடர்பு நாம் நன்கு அறிந்ததே. அதனால் தான் நான் இந்த விஷயத்தை அப்படி பார்க்கிறேன்.
நீங்க சொன்னது உண்மைதான். விஜயகுமார் இத உறுதி படுத்தும் விதமாக "எங்க வுட்டுல தினமலர் வாங்கமாட்டோம். தினகரன்தான் வாங்குவோம் என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் பேசி உள்ளார்.
Post a Comment