அழகில் ஆபத்து..
படித்தவுடன் ஒரு நிமிடம் உறைந்து போனேன், "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்ற பழமொழி பொதுவாக வலுவிழந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக சொல்லியது ஆனால் அது இங்கே தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க நினைத்தாலும் அவர்கள் எப்படி எல்லாம் வெ(டி)குண்டேழுந்து வருகிறார்கள் என்பதை குறிக்கும் வண்ணம் அமைந்தால் ஒரு வித பயம் தானே மிஞ்சுகிறது..? சமீபத்தில் நியூயார்க் நகரில் ஒரு ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட தாயாரக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார், செப்டம்பர்-11 க்கு பிறகு நியூயார்க் பாதுகாப்பு விஷயத்தில் ரொம்பவே கெடுபிடி, அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம்..?
ஒரு நான்கைந்து பேர் தனித்தனியாக கடைகளில் விரல்களின் அழகுக்காக போடப்படும் நைல் பாலிஷ் (nail polish) நீக்குவதற்கான ரசாயன பூச்சை வாங்கி இருக்கிறார்கள், இத்துடன் ஹைட்ரஜன் பெரோக்ஸ்யடே (hydrogen peroxide) கொண்ட தலை முடிக்கான சாயம் இவற்றுடன் கலந்து வெடிகுண்டு தயாரிக்க முயற்சித்து இருக்கிறார்கள். இது சாத்தியம் தான் என்பதையும் அமெரிக்காவின் புலனாய்வு துறை உறுதி செய்துள்ளது. அழகு சாதனத்தை கொண்டு நகர அழகை குலைக்க நினைத்தவர்களை என்னவென்று சொல்வது...?
0 comments:
Post a Comment