பத்திரிகை சுதந்திரம் -- ஒரு பயவுரை
கேள்வி: ஹனிமூன் டிரிப் எப்படி இருந்தது? எங்கே போய் இருந்தீர்கள்?
பதில்: ''ப்ளீஸ் வேண்டாமே. இது பர்சனல் விஷயமாயிற்றே.
கேள்வி: குறைந்தபட்சம் எந்த நாட்டிற்குச் சென்றீர்கள் என்று கூடவா சொல்லக் கூடாது?
பதில்: ''''ஐரோப்பா'' என்று மட்டும் கூறி சிரித்து மழுப்பிவிட்டார்.
கேள்வி: எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: இப்பதான் கல் யாணம் ஆகி இரண்டு மாதம் ஆகிறது. எங்கே போனாலும் இதையே கேட்கிறார்கள். கண்டிப் பாக குழந்தை பெற்றுக் கொள்வேன். ஆனால் எப்போது என்று சொல்லமாட்டேன்.
சமீபத்தில் சில பத்திரிகைகள் சுதந்திரம் என்ற பெயரில் எப்படி எல்லாம் தனி மனித உரிமை மீறலை நடத்துகின்றன என்பதற்கான உதாரணம் தான் மேலே சொன்னது. ஒரு நடிகை என்ற காரணத்தினாலேயே அவர் தனது தேன்நிலவு குறித்து விரிவாக சொல்லவேண்டும் என்றும் "எப்பொழுது குழந்தை பெற்று கொள்வேன் என்று சொல்லவேண்டும் என்றும் எதிர்பார்ப்பது யார் வாசகர்களாகிய நாமா ...? இல்லை நிருபரின் குரூரமா..? இல்லை பத்திரிகை விற்பதற்காக அந்த பத்திரிக்கை நடத்தும் நிர்வாகத்தின் தூண்டுதலா..? இல்லை அந்த நடிகையாவது தயவு செய்து இப்படி எல்லாம் கேள்வி கேட்காதீங்க அப்படின்னு சொல்லாத அலட்சியத்தை எப்படி எடுத்துக்கொள்வது..?. எதுவாகினும் பாதிப்பு எல்லாருக்கும் தான், என்பதை எல்லாரும் உணரவேண்டும்.இப்படி இருந்தா அப்புறம் ஒரு பொது இடத்தில் ஒரு நடிகையின் இடையை கிள்ளுவதை தடுப்பது எப்படி..? இப்படியே போனால் யார்தான் அக்கறையோடு நடந்து கொள்வதுஇது அறிவுரை அல்ல பயவுரை.
0 comments:
Post a Comment