மனிதம் வளர்ப்போம்
. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரிச்மொன்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக சீரழித்துள்ளது. இதை இன்னும் ஒரு பத்து பேர் பார்த்திருக்கிருகிறார்கள் ஆனால் யாருமே போலீசை கூப்பிடவில்லை. அத்துடன் இந்த "பார்வையாளர்கள்" அந்த கொடூரத்தை படம் பிடித்துள்ளார்கள். எங்கே போனது மனிதாபிமானம்..? குற்றம் செய்பவர்களை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களுக்குதான் தண்டனை அதிகம் என்று சட்டம் சொல்லுகிறது (அமெரிக்க சட்டமும் இதை சொல்லுதான்னு தெரியலை). அப்படி பார்த்தால் இந்த பதினைந்து பேரும் மிகப் பெரிய தண்டனைக்குரியவர்கள். இது குறித்து சமீபத்தில் C.N.N டி.வியில் வந்த ஒரு கலந்தரையாடல் நிகழ்ச்சி (LARRY KING LIVE), பல விஷயங்களை அலசியது. அதில் குறிப்பாக தீபக் சோப்ரா என்பவர் சொன்ன விஷயம், இது போன்ற கொடூர மனிதர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் வளர்க்கப்படும் சூழலில் இது போன்ற கொடூர விஷயங்கள் மிகவும் சாதரணமாகவும் அன்றாட நிகழ்வுகளாகவும் ஆகிப்போவது தான். வன்முறை அவர்கள் வாழ்கையின் ஒரு அங்கம், எனவே இதை அவர்கள் சாதரண நிகழ்வுகளிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மனித மூளையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. இவற்றை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை அதனால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.
1. Limibic Brain
2. Reptalian Brain
3. Cardical Brain
இதில் Limbic Brain என்பது மனிதனின் உணர்வு சம்மந்தபட்டவைகளை தீர்மானிப்பவை. இந்த பகுதி பாதிக்கப்பட்டாலோ அல்லது பழுதடைந்தாலோ சமூகத்திற்கெதிரான சிந்தனைகளும்,அடுத்தவர்களின் நலனை பற்றி அக்கறை கொள்ளாத மன நிலையும் ஏற்படும். இதை சரி பண்ணி கொள்வதற்காகத்தான் ஆன்மிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களை குழந்தை பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும் அதாவது நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது அது நாம் தவறு செய்யும் போது தண்டிக்கும். என்றெல்லாம் விளக்கி சொல்லவேண்டும். சிறுவயதிலிருந்தே தியானம் போன்றவற்றை கற்று கொடுத்தலின் மூலமாக அவர்கள் மூளையின் Limbic பகுதி பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளலாம். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Daniel Amen என்ற உளவியாளர் (Psychiatrist) சொல்கிறார், மூளையின் முன் பகுதியில் தான் நல்லது கெட்டதை பகுத்தறியும் தன்மை உள்ளதாகவும் அதை குடியின் மூலமாகவும், போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதன் மூலமாகவும் இழக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் படத்தில் வரும் வாலி பாடலை போல "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.." . குழந்தைகளுக்கு மனிதத்தை போதிப்போம் மனிதம் வளர்ப்போம்.
0 comments:
Post a Comment