பாரதியும் சாதீயும்
பாரதி என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது தமிழ்,கவிதை,பெண்ணடிமை, சுதந்திரம் இவற்றின் கூட சாதி எதிர்ப்பும். சமீபத்தில் நான் படித்த ஒரு வலைப்பதிவில் பாரதி தன் கவிதைகளில் இந்து மத வெறியையும், சாதி வெறியையும் புகுத்தி இருந்தார் என்றும் அவர் ஒரு பிரமாணர் என்பதாலேயே இந்த முன்னுரிமை என்றும் ஒருவர் எழுதியிருந்தார், பேசியும் இருந்தார் (ஒளி காட்சியும்) இருந்தது. எனககு இது முதல் அனுபவம் முண்டாசு கவிஞனின் முதுகிலும் சாதி முத்திரையா..? எப்படி பாரதி மீது இப்படி ஒரு அவச்சொல் வந்தது...? இதை எப்படி ஏற்றுக்கொள்வது...? எல்லா மனிதர்கள் மீதும் சாதியின் நிழலாவது படிந்துள்ளது, ஆனால் அதை காரணமாக வைத்து எப்படி அவர்கள் அந்த சாதியின் பிரதிநிதிகளாகவே பார்க்கப்படுகிறார்கள் ..? இது முற்றிலும் தவறானது. இதே மாதிரிதான் கட்டபொம்மன்,சிதம்பரனார், இன்னும் பலரும் தலைமுறையின் சாதி தீனிக்கு பலியானார்கள் என்பதை முன்பே சொல்லி இருக்கிறோம். இருந்தாலும் "சாதிகள் இல்லையடி பாப்பா..." என்ற பாடலை எழுதிய பாரதியையே அந்த கூண்டில் ஏற்றுவார்கள் என்பதை கனவிலும் ஏற்கமுடியவில்லை. இந்த மாதிரியான சிந்தனைகள் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. பாரதியையும் சாகா வாரம் பெற்ற சாதி என்ற தீ கொண்டு தயவு செய்து யாரும் சுடாதீர்கள்.
4 comments:
முதலில் இப்படிப்பட்ட பதிவுகள் எழுதும் முன்,கொஞசம் இந்துமதக்கொள்கைகளையும் பாரம்பரியக்கோட்பாடுகளைப்ப்ற்றியும் தெரிந்து விட்டு வருவது நல்லது. பலகுழப்பங்களைத்தவிர்க்க உதவும்.
பாரதியைப்பற்றி அப்படிச்சொன்னார்கள் என்று மொட்டையாக எழுதிவிட்டு உணர்ச்சிவசப்படுவதை விட, என்ன, ஏன் சொன்னார்கள், அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாக்காரணங்களையும் உங்கள் பதிவைப் படிப்பவருக்குச் சொல்லின் அது நல்ல் சுவாராசியமான, அறிவைத்தரும் பதிவாக மலரும்.
நீஙக்ள் அப்படிப்பட்ட எண்ணங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, பாரதியை ஒரு sacred cow ஆகப்பார்க்கிறீர்கள்.
அறிவாளிகள் நாம் எல்லாரும் தவறு செய்தவர்களே. No man is perfect என்பதை ஒத்துக்கொண்டுதான் ஒருமனிதனை மதிப்பிடுவர்.
மற்றொரு அடிப்படையான விடயம், ஒரு மனிதனின் ஆளுமை (personality) பலபருவங்களைத் தாண்டித்தான் வரும். பார்தியும் அவ்வாறே. Growth and development of his personality நன்கு ஆராயப்படவில்லை. அப்படி யாரேனும் செய்யும்போது பாரதி காவலர்கள் அதை விரும்புவதில்லை.
எட்டயபுரத்தின் வாழ்ந்த பாரதி, மதுரைக்குப் போன பாரதி, காசிக்குச்சென்ற போது பாரதி, சுதந்திரப்போராட்டத்தில் பாரதி, புதுச்சேரியில் வாழ்ந்த பாரதி (இங்குதான் தலித்துக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார்! பூணூல் போட்ட சம்பவமும் இங்குதான்), திருவல்லிக்கேணி பாரதி, இறுதி ஆண்டுகளில் போதைப்பொருளுக்க்டிமையான பாரதி - இப்படி படிப்படிப்பான் பருவங்களைத் தாண்டிய பாரதியைப் பார்க்க உங்கள் மனம் மறுக்கிறது.
சாதி, வருணக்கொள்கை - இவற்றிற்கு வேறுபாடு தெரிந்து வருணக்கொள்கையை மட்டும் ஏற்றுக்கொண்ட்வர். அதனால் சமூகம் கட்டுக்கோப்பாக வாழ்ந்தது என்றும் அதைப்படைத்தோர் தீர்க்கதரிசிகள் என்றும் அதைக்கடைபிடிப்பவனே பிராமணன் என்றும் அஃது அப்பழுக்கில்லாமல் இன்று இருக்குமானால், தலித்துகளும் இக்கொள்கையை ஏற்பர் என்றும் (இது மோடி சொன்ன: ‘மலம் அள்ளும் தலித்து அதை பக்திசிரத்தையோடு செய்யின் இறைவனின் அருளுக்குப் பாத்திரமாகி சொர்க்கம் செல்வான்” ஒததது). மோடி சொன்னது வருணக்கொள்கையின் அடிப்படை. அவரவருக்கு கொடுக்கப்பட்ட தொழிலை அவரவர் பக்தி சிரத்தையோடு செய்வதே. இதையே பரரதி விரும்பினார்.
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றது, வருணங்கள் இல்லையடி பாப்பா என்பதற்கு வேறானது.
அஃதாவது, வருணக்கொள்கையில், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது கிடையா. சிறந்த தொழில், தாழ்ந்த தொழில் கிடையா. அனைவர் தொழிலும் சிறந்தது, இறைவனுக்கும் சமூகத்திற்கும் உகந்தது. எனவே அனைவரும் இன்றியமையாதவர். அனைவரும் சமம். ஒருவரையொருவர் மதித்து வாழ்வது வருணக்கொள்கையாகும்.
மாறாக, சிறப்பு ஒவ்வும் தொழிலால்; பிறப்பிலே ஏற்ற தாழ்வு உள எனப் பிரித்து, தீண்டத்தகாதவர் என சொல்லும்போது, வருணக்கொள்கை திரிந்து சமூக நல்லிணக்கத்திற்கு பெருங்கேடு விளைவிக்கிறது. இப்படி வரும்போது, அதை சாதிகள் எனச் சொன்னர்.
இதை பாரதி கண்டித்தார். என்வே, சாதிகள் இல்லையடி என்றார். இப்படித்திரித்து சமூகத்தைக்கெடுத்தோர் பார்ப்பனர்கள் எனச் சொல்லி அவர்களைத் திட்டினார். பார்ப்பனர்கள் தங்கள் வைதீகவாழ்க்கைனெறியைத்திரித்து, விலகிவிட்டனர் என்றார்.
‘வேதம் அறிந்தவன் பார்ப்பான்’ என்றும்,
‘முன்னாளில் வேதம் ஓதுவார்
மூன்றுமுறை பெய்யுமடா வானம்.
இன்னாளில் எதுவும் செய்து காசு பெறப்பார்ப்பார்’
என்றழுதார். அதாவது, வருணக்கொள்கை திரிக்கப்பட்டது, புனிதமாக கடைபிடிக்கப்படவில்லை என்று விசனித்தார்.
பூனைப்பாட்டில், (அதுவும் குழந்தைக்காக எழுதப்பட்டது) இவ்வருணக்கொளகையே சிறந்தது என்றும் அதை கடைபிடி பாப்பா என்றார்.
‘பிறப்பொக்கும் எல்லாவுய்ரிக்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையால்’
என்ற கொள்கை வள்ளுவருக்கும் இவருக்கும் பொது. இருவரும் தொழில் வேறுபாட்டைக்கடைபிடித்தால் நலம் என்றனர். இதன்படி, மலம் அள்ளும் தலித்து என்றும் கல்வி கற்க முடியாது. ஏனெனின் வள்ளுவர் காலத்து கல்வி, வேதக்கல்வி. பாரதி வேதத்தை பார்ப்ப்னரே செய்ய வேண்டும் என்றார்.
இத்துடன் நிறுத்திகொள்கிறேன்.
கள்ளபிரான் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கு இங்கேயே மறுப்பு சொல்வதை விட ஒரு தனி பதிவே போடலாம் என்றே தோன்றுகிறது (சற்று விரிவாக). தயவு செய்து அதையும் படித்துவிட்டு சொல்லுங்க.
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_16.html
பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை
ஆவலுடன் எதிர் நோக்குகிறேன், திரு சரவணன்.
அத்ற்குமுன் பாரதியின் பூனைப்பாடலைப் படித்துவிடுங்கள்.
கள்ளபிரான்
Post a Comment