அவசர சட்டமும் அதனால் நிகழப்போகும் விபரீதமும்
நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சேர நுழைவுத் தேர்வில் பங்கேற்க 12ம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தற்போது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை 80 முதல் 85 சதவீதமாக உயர்த்த மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 2011-வது கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று அத் துறையின் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மேற்கண்ட செய்தியை இன்றைய செய்திகளில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ரொம்ப நாளா எனக்குள் ஒரு கேள்வி இருந்துகிட்டே இருக்கு. சமீபத்தில் PROJECT MANAGEMENT குறித்த ஒரு தேர்வு எழுதினேன் நான் 63% மதிப்பெண் பெற்றேன். ஆனால் நான் தேர்வில் பாஸாகவில்லை என கூறிவிட்டார்கள். விசாரித்த பொழுதுதான் தெரிந்து கொண்டேன் அதற்கு 80% மதிப்பெண்கள் தான் குறைந்த பட்ச தகுதி என்று. பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு கல்வி எட்டா கனியாக இருந்த பொழுது அது கிடைக்க போராடியவர்களை நமக்கு தெரியும், அதன் மூலம் கல்வி பயன் அடைந்தவர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வியாப்பித்திருக்கிருகிறார்கள். இது பாராட்ட பட வேண்டிய ஒன்று. தொழில் நிமித்தமாக தான் சார்ந்திருக்கும் சிறிய ஊரில் ஒருவன் சாதரண கல்விநிலயத்தில் கல்வி கற்க நேர்ந்தால் அவனை மேலே கொண்டுவரவும் ஒரு சட்டம் போடப்பட்டு அவனுக்கிருந்த தடைகல்லும் நீக்கப்பட்டது. ஆனால் என்னை போல 60% மதிப்பெண் எடுப்பவர்களுக்கு என்னதான் கதி..? எங்களால் எல்லாம் உயர் பதவிகளை அடையவே முடியாதா..? அப்படிங்கிற கேள்வி என் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் நீயும் 80% மதிப்பெண் வாங்க வேண்டியது தானே..? அப்படிங்கிற கேள்வி வரும்,சரி நாங்க முயன்றோம் முடியவில்லை ஆனால் அதற்காக அந்த வாய்ப்பு என்னை போன்றோருக்கு முற்றிலுமாக மறுக்க படுவது என்பது என்ன நியாயம்..? இது இன்னொரு வகையில் அடிமைகளை தோற்றுவிக்கும் வழிதானே.? இப்படியே போனால் வருங்காலத்தில் 80% வாங்கியவர்கள்தான் வாழலாம், மற்றவர்கள் எல்லாம்...?! என்ற நிலை கூட வரலாம். அது
எப்படின்னு கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம் ஒரு வளமான பொருளாதாரம் என்பது அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களது அடிப்படை தேவைகளை குறைந்த அளவு பணம் செலவு பண்ணினாலே கிடைக்கும் படி இருக்க வேண்டும் அப்பொழுது தானே அந்த நாடு நல்ல வளமான பொருளாதாரத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதை விடுத்து ஒரு வேளை சோற்றுக்கே சில ஆயிரங்களை செலவு பண்ணும் படி இருந்தால் அது எப்படி நல்ல பொருளாதாரம் ஆக முடியும்..?
அப்புறம் கல்வியும், மதிப்பெண்ணும் மதிக்கப்படமால் போவதற்கே வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான திட்டங்களுக்காக அவசர சட்டம் போட்டுபவர்கள் வருங்காலத்தில் அது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment