ஆணியே புடுங்கவேணாம்
அனில்அம்பானிக்கும், முக்கேஷ்அம்பானிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக நிலை ஏற்படாததால் அன்றைய தினம் இந்திய பங்கு சந்தை வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தாக நான் சில தினங்களுக்கு முன் செய்தி படித்தேன். ஆனால் கிட்டத்தட்ட அதே நாளில் அமெரிக்காவில் ஒரு அறிக்கை வெளியடப்படுகிறது அதில் ஒருநாளைக்கு சராசரியாக 7000 பேர் வேலை இழப்பதாக. ஆனால் அன்றைய அமெரிக்க பங்கு சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது. அது அமெரிக்கா, இது இந்தியா அப்படின்னு கைப்புள்ள மாதிரி நீங்கள் சொல்லலாம். ஆனால் இங்கு நிகழ்பவை எல்லாம் காமெடியா தெரியலை, ரொம்ப சீரியசான ஒரு கொள்ளை சட்ட பூர்வமாக அரங்கேறுதொன்னு தோணுது.
பங்கு சந்தை கிட்டத்தட்ட நம்ம சுதந்திரம் வாங்குற காலத்திலிருந்தே இருந்து வருவதாக அறிகிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் பங்குசந்தையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்ததான்னு தெரியலை. ஏன்னா என்னை பொறுத்தவரை பங்கு சந்தை என்பது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதற்கான ஒரு அமைப்பு. சரி அது பாட்டுக்கும் அது வேலைய பண்ணட்டும் எனக்கென்ன அப்படின்னு நடுத்தர மக்களோ, அன்றாடம் தான் சம்பாதிப்பதை ஒரு சிறு சேமிப்பாக்க வங்கி கணக்கு தொடங்கும் சாதரண மக்களோ இருக்க முடியாது. இதன் வளர்ச்சிக்கு முழுதாக துணைபோவதுதான் உலக தாரளமயமாக்களின் குறிக்கோள் அல்லது செயல்பாடு. சாதாரண குடிமகன் ஒருவன் தான் பங்குசந்தையின் நிழல் படியாமல் தனது வாழ் நாளை கடத்த நினைத்தால் அது இன்றைய சூழலில் நடக்காத காரியம்.
தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரின் பாக்கெட் பங்குசந்தையால் திருடப்படுவதை எல்லோரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவன் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையில் வைக்கப்படும் பணம் போய் சேருமிடம் பங்குச்சந்தை.இப்படி எப்படி பார்த்தாலும் பணம் போய் சேருமிடம் பங்குசந்தைதான். சமீப காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு பங்கு சந்தைகளின் குறீயீட்டு எண் குறைவதை கொண்டே கணக்கிட பட்டது. இந்த சூதாட்டத்தில் கை தேர்ந்தவர்களே பணத்தை பெற முடியும். அப்படி பட்ட பங்கு சந்தை அனில் அம்பானிக்கும் முக்கேஷ் அம்பானிக்கும் ஒரு சண்டைன்னா தன்னை சுருக்கி கொள்ளுமாம் ஆனால் அதே பங்கு சந்தைக்கு தனது வேர்வையால் பங்கு சேர்க்கும் சாதாரண மனிதனின் வேலையிழப்பிற்கு செபி மன்னிக்கவும் செவி சாய்க்கதாம். இது எப்படி இருக்கு..? ஒரு நாட்டின் பங்கு சந்தை அந்த நாட்டின் பொருளாதாரத்தின் முகமாவே பார்க்கப்படுவது. அப்படி இருக்கும் பொழுது நாட்டில் உள்ள குப்பனுக்கும்,சுப்பனுக்கும் ஆதரவா இருக்கனுமில்லையா..? ஆனால் அது இங்க நடப்பதில்லை அதான் இங்கே பிரச்சனையே.
"எனக்கு தான் கோபம் வராதுங்க்றேன்ல அப்புறம் ஏன்யா அதையே தூண்டுறீங்க..? " அப்படின்னு கைப்புள்ள சொல்ற மாதிரி, நான்தான் பங்குசந்தையே வேனான்கிறேன் அப்புறம் வலுகட்டாயமா PF ங்குற பேர்ல வாங்கி அதை பங்குல போட்டா என்ன அர்த்தம்..? சரி அப்படியே போடட்டும் அப்புறம் ஏன் என்னை போல ஏழாயிரம் பேருக்கு வேலை போறப்ப பங்கு சந்தை கீழே போக மாட்டேங்குது..? மேலே உள்ள பணக்காரர்களுக்கு கீழே உள்ளவன் காசு வேணும், அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. இப்படி நினைக்கிறவங்க திருடனைவிட மோசமானவங்க. இவங்க எங்களுக்காக ஆணியே புடுங்கவேனாம். எங்களை தொந்தரவு பண்ணாம அவுங்க வேலைய பார்த்தா போதும். அப்படிங்கறது தான் என்னை போன்றவர்களின் வேண்டுகோள்.

0 comments:
Post a Comment