வியாபர யுக்தியும் வில்லங்க புத்தியும்


விஜய் டிவி-யில் இரவு 7 மணிக்கு திரையுலக நட்சத்திரங்கள் பங்கு பெற்ற கமல்-50 விழா பற்றிய தொகுப்பை வெளியிட்டது. சன் டி.வி. குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் கே டி.வி எப்பொழுதும் இரவு 8 மணிக்கு காண்பிக்கும் (சூப்பர் ஹிட் இரவு காட்சி) படத்தை இரவு 7 மணிக்கே ஒளிபரப்பியது. ஆஹா என்ன வியாபர யுக்தி என்று சொல்வதற்கு பதில் சீ சீ இது என்ன வில்லங்க புத்தி...? அப்படின்னுதான் சொல்லத்தோன்றியது. சன் டி.வி இது மாதிரி செய்வது இது முதல் முறை அல்ல ஆனால் இது மாதிரியான செயல்கள் நடுநிலையாளர்களிடையே ஒரு வித வெறுப்பையே உண்டுபண்ணுகிறது. இதை சன் டி.வி.-இன் தலைமை அறிந்திருக்குமா என்று தெரியவில்லை. சன் டி.வி. ஆரம்பித்த புதிதில் ஒரு வித கிரியேட்டிவிட்டி இருந்தது, ஆனால் சன் டி.வி. வளர வளர அது குறைந்து, பணத்தால் இல்லை அதிகாரமையத்தில் தனக்குள்ள செல்வாக்கால் எல்லாத்தையும் சாதித்து விடலாம் என்று நினைத்து அது செயல் படுவது போல தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னால் தனக்கு தொலைகாட்சி உரிமை கொடுக்காத படங்கள் பட்ட பாட்டை நாம் நன்கு அறிவோம். இது ஒரு வித மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. சிலபேர் இதை கண்டிக்க கூட செய்தார்கள் ஆனால் கடைசிவரை சன் டி.வி அதை பொருட்படுத்தவே இல்லை. தயாரிப்பாளர் சங்கம் புதிய படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் ஒரு குறிப்பிட்ட தடவை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தது, ஆனால் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் கீழே தூக்கி போட்டது. இதற்கு சன் டி.வி. தான் தமிழிலே நெ.1 சேனல் என்ற நிலை தான். இதே மாதிரி தான் விஜய் டி.வி. வசம் இருந்த "அசத்தப் போவது யாரு" நிகழ்ச்சியை இங்கே கடத்திக்கொண்டு வந்தது. ஆனால் இது சன் டி.வி.க்கு வந்த பிறகு அந்த நிகழ்ச்சியின் சுயம் இழந்து சன் டி.வியின் புகழ் பாட பயன்படுத்திக் கொண்டது.

முன்பெல்லாம் சன் டி.வி செய்யும் முயற்சியை மற்றவர்கள் காப்பி அடித்து கொண்டிருந்தார்கள் சன் டி.வி முன்னிலை வகித்ததும் நமக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி இல்லை இருந்தும் சன் டி.வி. முன்னிலை வகிக்கிறது என்பதை ஏற்றுகொள்ள கடினமாக இருக்கிறது. மீடியா நினைத்தால் ஒருவரை புகழேணியில் ஏற்றவும் முடியும் அதிலிருந்து இறக்கவும் முடியும் என்ற நிலையை பயன்படுத்தி ஊடகத்தின் எல்லா பரிணாமங்களிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிக்க முயற்சிக்கிறது. போதாகுறைக்கு திரையுலகிலும்
தனது வில்லங்க புத்தியை நுழைக்க பார் க்கிறது இல்லை அந்த செயலை தொடங்கி விட்டது. உதாரணமாக தனக்கு பிடிக்காதவர்களின் படங்கள் பிடிக்காதவர்கள் என்றால் யார் தொழில் ரீதியாக தனது தொலை காட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க
மறுத்தவர்கள், படம் வெளியாகும் வேளையில் தனது சன் பிக்சர்ஸ் சார்பாக ஒரு படத்தை வெளியிட்டு அவர்களுக்கு தொந்தரவு தருவது. சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளை வாடகைக்கு அமர்த்தியுள்ளது, அதன் மூலம் மற்ற படங்கள் அல்லது தனக்கு வேண்டாதவர்கள் படம் வெளியாகும் போது தனது படங்களை வெளியிட்டு திரையரங்குகள் இல்லாமை நிலைமையை கொண்டுவருகிறது.இப்படிதான் வில்லு படத்தின் உரிமையை ஐங்கரன் சன் டி.விக்கு கொடுக்க மறுத்ததால் கட கட வென தனுஷ் நடித்த "படிக்காதவன்" என்ற படத்தை
முடித்து வெளியிட்டு "வில்லு" ஒடிந்து போக செய்தது. இதை அந்த துறையிலிருக்கும் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். நீங்கள் நினைப்பதும்
சரி எப்படியாயிருந்தாலும் "வில்லு" ஒடிந்து தானே போயிருக்க வேண்டும். அது அந்த படத்தின் தலைவிதி அல்லவா ..? அப்படின்னு. அதுவும் சரிதான் ஆனால் அந்த வெற்றி காற்று திசை மாறி அடித்து சன் டி.வி வசம் அடைந்தது சன் டி.வி.இன குறுக்கு புத்தியாலையே. "சிவா மனசுல சக்தி" என்ற படம் விகடன் தயாரித்தது, இந்த படத்தை சன் டிவி. வெளியிடுவதாகத்தான் அறிவித்தார்கள், ஆனால் சன் டி.வி நாள் கடத்திக்கொண்டு போகவே விகடன் தாங்களே அந்த படத்தை வெளிடுவதாக கூறி சன் டி.வியிடம் கேட்டார்கள். சன் டி.வியும் ஒத்துக்கொண்டு அந்த படம் வெளியாகும் வேளையில் ஒரு ஆங்கில படத்தின் தமிழ் மொழி ஆக்க படத்தை வெளியிட்டது. விகடனும் தப்பித்தது, காரணம் விகடனின் இரண்டு பெரிய சீரியல்கள் சன் டி.வியின் கல்லா நிரம்புவதற்கு (கோலங்கள்,திருமதி செல்வம்) பெறும் உதவி புரிவதே. இப்படி ஏதாவது ஒரு விதத்தில் தனக்கு சாதமாக நடந்து கொள்பவர்களை சன் டி.வி ஒன்றும் செய்யாது ஆனால் யாராவது எதிர்க்க முனைந்தால்..? அவ்வளவுதான். இப்ப கூட பாருங்க "வில்லு" போட்ட போட்டால் விஜய் தானாக தனது "வேட்டைகாரனை" சன் வசம் ஒப்படைத்து தீபாவளி விருந்தாக்க எண்ணினார். சன் டி.வி.இன பங்காளி ரெட்ஜெயண்ட் வழங்கும் "ஆதவன்" வருவதால் "வேட்டைக்காரனை" பிறகு ரிலீஸ் செய்கிறார்களாம். ஒன்னு அவுங்களுக்கு பங்காளியாக இருக்கணும் இல்லை அடிமையாய் இருக்கணும் அல்லது குறைந்த பட்சம் அவுங்க கல்லாவை பாதிக்கிற எந்த செயலையும் செய்யாமலாவது இருக்கணும் அப்பத்தான் அவுங்க பிழைக்க முடியும் இல்லன்னா..? அரசாங்கம் இதற்கெல்லாம் கட்டுப் பாடு கொண்டுவந்தால்தான் சன் டி.வி. போன்ற மீடியா வல்லரசுகளை ஒடுக்க முடியும். இதை எழுதிக்கிட்டு இருக்கும் போது அதே சன் டி.வியில் ஒரு பாடலை ஒளிபரப்பினார்கள் அது அவர்களுக்கும் பொருத்தும் என்றே தோன்றுகிறது, அந்த
 பாடல் "ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவுங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா.."


10 comments:

பாலகிருஷ்ணா October 13, 2009 at 10:26 AM  

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றைய நாட்கள் வரையிலும் இந்த அத்துமீறல்கள் இருந்து கொண்டே இருக்கின்றன ஏதேனும் ஒரு வடிவத்தில் ஏதேனும் ஒருவரின் மூலமாய். விதி என்ன தெரியுமா ? அதற்கு வரலாற்றுச் சான்றுகள் எக்கச்சக்கம்.

சண்ட கோழி October 13, 2009 at 10:52 AM  

அவர்களின் இந்த கீழ் தரமான புத்தி பற்றி இப்பொழுது அனைவரும் அறிந்து கொண்டு வருகின்றனார் என்பது மறுக்க முடியாத ஒன்று

ஏமாறும் தமிழன்,  October 13, 2009 at 12:21 PM  

a) 1 Year sub. Rs. 1000 + Instllation Rs. 1000
b) 1 Yr (Diwali Offer) 900 + Inst. Rs. 1250

what a comedy

ISR Selvakumar October 13, 2009 at 2:16 PM  

எவ்வளவு வலிமையாக மார்கெட்டிங் செய்தாலும், ஒரு கவன ஈர்ப்பைத்தான் கொண்டு வரமுடியுமே தவிர இரசிக்க வைக்க முடியாது. கவனித்தல் வேறு. இரசித்தல் வேறு. நீங்கள் சன் டிவி லோகோவை போட்டு தலைப்பை வைத்ததைப் போல, சன் டிவி கவன ஈர்ப்பை தெளிவாகச் செய்கிறது. இந்த போட்டி நிறைந்த உலகில் அப்படிச் செய்யவேண்டும், அப்போதுதான் தொடர்ந்து ஓட முடியும்.

Anonymous,  October 13, 2009 at 3:21 PM  

RKB
This should be prohibited.But now everyknows about sun t.v's these kind of bad activities. here after sun t.v has to be changed these kind of activities. Because now everybody watch all t.v programs which is good like vijay t.v's kamal 50 and Airtel supersinger. SO this is also one of the example for t.v lose their power and publicity gradualy.

Anonymous,  October 14, 2009 at 1:25 AM  

//இப்படிதான் வில்லு படத்தின் உரிமையை ஐங்கரன் சன் டி.விக்கு கொடுக்க மறுத்ததால் கட கட வென தனுஷ் நடித்த "படிக்காதவன்" என்ற படத்தை
முடித்து வெளியிட்டு "வில்லு" ஒடிந்து போக செய்தது.//
illena mattum villu movie 100, 200, 300 days odi irukuma???
enna boss comedy panreenga..

sollirukra vishayam correct than but adhukaga villu pathi ipdi ellam solladhinga..

APSARAVANAN October 14, 2009 at 7:49 AM  

//நீங்கள் நினைப்பதும்
சரி எப்படியாயிருந்தாலும் "வில்லு" ஒடிந்து தானே போயிருக்க வேண்டும். அது அந்த படத்தின் தலைவிதி அல்லவா ..? அப்படின்னு. அதுவும் சரிதான் ஆனால் அந்த வெற்றி காற்று திசை மாறி அடித்து சன் டி.வி வசம் அடைந்தது சன் டி.வி.இன குறுக்கு புத்தியாலையே//

I think you didnt read this article fully. Please read it fully.

Barari October 14, 2009 at 8:35 AM  

aannanappatta kalaizareye nalliravil kaithu seithu nadu rottil utkaara vaiththaarkal.appadiyirukkubothu kalanidhi maranin kottaththai adakkum naal nitchayam varum.vinai vithaiththavan vinai aruppaan.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP