தீர்ப்பு உங்களுடையது

(இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கான பதில் அல்லது தீர்ப்பு முழுக்க முழுக்க உங்களுடையது)
திரையுலகினர் நடத்திய கண்டன கூட்டத்தில் ரஜினி சொல்லியது...
"..தயவு செய்து பத்திரிக்கையாளர்கள் இனிமேல் விபச்சாரம் செய்பவர்களது போட்டோவை போடாதீர்கள். அவுங்க என்ன சுகத்துக்காகவா அப்படி நடந்துக்குறாங்க..? ரெண்டு வேலை சோத்துக்காக . அப்படி போட்டோ போடும் பட்சத்தில் அதில் ஈடுபட்ட ஆண்களின் படத்தையும் போடணும். அதுக்கு தைரியம் இருக்கா...? "

விண் டி.வி உரிமையாளர் தேவநாதன் சொல்லியது...
".. கள்ளச்சாராயம், ரவுடித்தனம் போன்றவை கூட ரெண்டு வேலை சோத்துக்காகத்தான் அதுக்காக அவுங்க படத்தையும் போடாமல் விட்டுறலாமா?"

பார்க்கர் (தாவு ஹீத் அமைப்பு தலைவர்) சொல்லியது ....
"..தினமலர் செய்தி ஆசிரியரை பெண்கொடுமை சட்டத்தில் கைது செய்தவர்கள் முதலில் ஜெயலலிதாவை "திருமதி" என்று அழைக்கும் முதல்வர் மீது தானே நடவடிக்கை எடுக்க வேண்டும்..?"

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி சொல்லியது..
"..இதுவரை எனககு அள்ளிக்கப்பட்ட தங்கமோ வெள்ளி நகையோ அவற்றை கலைஞர் கருவூலம் வசம் ஒப்படைத்துள்ளேன். அதே மாதிரி திமுக-வை சேர்ந்த மற்றவர்களுக்கும் அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலமாகவோ அல்லது அழகிரி மூலமாகவோ கலைஞர் கருவூலம் வசம் ஒப்படைக்க வேண்டும்..."

கோவை குண்டு வெடிப்பில் கைதாகி சிறையிலிருக்கும் பாஷா சொல்லியது..
".. கோவை குண்டு வெடிப்பில் தண்டனை பெற்றுள்ள என்னை போன்றவர்கள் அமைதி வழி தீர்வு காண துடிக்கும் பொழுது , வன்முறைக்கு காரணமானவர்களை கொள்வதில் தவறில்லை என்ற பொருள்பட கமல் உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தை எடுத்திருப்பதன் மூலம் சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டுவிட்டார். தைரியமிருந்தால் உண்மையிலேயே வன்முறைக்கு காரணமானவர்களை நேரடியாக சாடி படம் எடுக்கும் தைரியம் கமலுக்குண்டா...?"





3 comments:

Anonymous,  October 8, 2009 at 5:02 PM  

eppa ini ungalukku aduththa appu vaikanuma ? illa kekuren mathavunga pechuku ,"unga theerpukku ...", titlae podara indha blogwaorld politics athukku theerpu eluthunga. Enna appa paththa lum famous irukra aalungalai periya nermai vaadhi maadhiri eluthutathu ethukku unga blog hits-i kootava?
Sari sir, yen sir pengalauuku edhiraa nadukkura vanmuraiyila avargal indha thozilil thallappaduvatharugum, athan payanaaligal, payanpaduthi, than suya laabathukku irukkum /Mama/kal ukkum neenga sonna matra vishayngalukkum oppeedu sariyaandaha. Che, neenga ellam ....

APSARAVANAN October 8, 2009 at 5:33 PM  

உங்களுடைய comments படித்தேன். நான் படித்த சில விஷயங்களை இங்கே கொடுத்திருக்கேன் நீங்க இதை படிச்சு உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லிக்கலாம் இதிலும் ஒரு சுவாரசியம் இருக்குது. பழ மொழி சொன்னா ஆராயக் கூடாது அனுபவிக்கனும் அப்படின்னு சொல்லுவாங்க அது மாதிரி. கவுண்டமணி செந்தில் பிரபலமாக இருந்த காலத்தில் கவுண்டமணி மீது ஒருவர் வழக்கு போட்டார் எதற்காக தெரியுமா..? கவுண்டமணி செந்திலை ரொம்ப திட்டுறார் இது தனி மனித உரிமை மீறல்னு. அது மாதிரி இருக்கு நீங்க சொல்றதை படிக்கும் போது. இருந்தாலும் நீங்க உபயோகிச்சு இருக்கிற வார்த்தைகள் அதிகம் வலி ஏற்படுத்தக்கூடியவை. தயவு செய்து எப்படி பேசனும்னு தெரிஞ்சு கிட்டு பேசுங்க. இங்கே நீங்க தாரளமா விவாதம் செய்யலாம். ஆனால் அதிகாரம் செய்யாதீர்கள். நீங்க சொல்ற மாதிரி நான் எங்காவது பெண்களுக்கெதிராக ஏதாவது சொல்லி இருக்கேனா..? யாரோ எதையோ சொன்னதற்கு நான் எப்படி காரணம் ஆவேன்...?

நீங்க சொல்ற மாதிரி புடிச்ச Blog hits கூட்டுற வேலை எல்லாம் இல்லை. நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க பிரபலமானவங்களை அவுங்க சாதியை சொல்லி திட்டுறது இல்லை மதத்தை சொல்லி திட்டுறது இல்லை அவுங்க மொழியை சொல்லி திட்டுறது அப்படி எழுதனும்னு எதிர் பார்குறீங்களா..? அதுக்கு நான் ஆள் இல்லை. சரி ஆரயக்க் உங்க பேரை பதிய வேண்டியது தானே அதையே இதுல மறைச்சு "Annonymous" என்ற அடையாளத்துடன் தானே Comment போட்டிருக்கீங்க...?

passerby October 9, 2009 at 5:52 AM  

தீர்ப்பு 1: இரசனி என்றுமே எதையும் ஆழ சிந்திக்கத்தெரியாதவர். வறுமைக்கு விபச்சாரம் செய்கிறார்கள் அய்யோ பாவம் விட்டுவிடுங்கள் என்பது சரியல்ல். விபச்சாரம் சட்டப்படி குற்றமல்ல. ஆனால், அதை பலபெண்கள வைத்து செய்வது சட்டப்படி குற்றம். புவனேசுவரி அதைச்செய்தார். அவர் காட்டிய மற்ற நடிகைகள் (அவர் சொன்னது சரியென்றால்) தனிப்பட்ட முறையில் செய்தனர். அது அவர்கள் தனிப்பட்ட விசயம். சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

வறுமை காரணமாக ஏகப்பட்ட குற்ற்ங்கள் நட்க்கின்றன. அப்படியே விட்டுவிட்டால்?

இரசனிக்கு பதில் சொன்ன விண்டிவிக்காரர் சரியாகச்சொன்னார்.

தீர்ப்பு 2: பார்க்கர் சொன்னது சரி. ஒரு திருமணமாகத் பெண்ணை, அவளை திருமதி எனச்சொன்னது, அவளின் ‘நடத்தையை’ப் பற்றி புறம் சொல்வதாகும். This is character-assassination. இதை சொன்ன கருனானிதியை ஏன் தமிழக போலீஸ் sexual harassment caseல் உள்ளேத் தள்ளவில்லை?

தீர்ப்பு 3: இது நல்ல முடிவு. அவர்கள் தொண்டரில் யார் இப்படி பலபல பெரியபெரிய பரிசுகளப்பெறுகிறார்கள்?

தீர்ப்பு 4: உ.பொ.ஒ - பற்றி இருபுறமும் கருத்துகள் வந்து முடிந்துவிட்டன. நான் பல்பின்னூட்டங்களில் இப்படி ஒரு மதத்தார் அனைவரையும் மக்கள் பயங்கலந்த ஐய்த்தோடு பார்க்கும்படி படம் வருதல் நாட்டின் மக்கள் நல் வாழ்க்கைக்கு கேடு என்று எழுதி விட்டேன். பாஷா அதை வேறு விதமாகச் சொல்கிறார். இசுலாமியர் அனவருமே குற்றவாளிகள் என நம்பும்படி யாரும் எதுவும் சொல்லவே செய்யவே கூடாது. தமிழ்பேசுபவரே இராஜீவைக்கொன்றனர். கமல் தமிழ்பேசுகிறார். அவரையும் தூக்கில் போடலாமா?

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP